என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிறிஸ் லின்"
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு அரங்கேறிய 47-லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் மல்லுகட்டின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் களம் புகுந்தனர். பரிந்தர் ஸ்ரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்ட சுப்மான் கில், அதே உத்வேகத்துடன் விடாமல் மட்டையை சுழட்டினார். கிறிஸ் லின்னும் சரவெடியாய் வெடிக்க, ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் ஜோடியாக 96 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கிறிஸ் லின் 54 ரன்களில் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர் ) கேட்ச் ஆனார். இதன் பின்னர், முந்தைய நாள் கேப்டனின் முடிவுகளை சரமாரியாக விமர்சித்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், திடீரென 2-வது விக்கெட்டுக்கு இறக்கப்பட்டார். ஒரு சில ஓவர்கள் நிதானத்துக்கு பிறகு ரஸ்செல் தனது கைவரிசையை காட்டினார். மறுமுனையில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் 76 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர் ) வெளியேறினார்.
அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் வந்தார். மறுமுனையில் ரஸ்செல் ரன்வேட்டை நடத்தினார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மும்பை கேப்டன் ரோகித் சர்மா விழிபிதுங்கிப் போனார். அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் பவுலர்கள் திண்டாடினர். ஆப்-சைடுக்கு வெளியே பந்து வீசினாலும் அதையும் நொறுக்கித் தள்ளினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய அவர், பும்ரா, மலிங்காவின் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. அவரது அசுரத்தனமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி மலைப்பான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.
20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோர் இதுதான். அது மட்டுமின்றி மும்பைக்கு எதிராக கொல்கத்தாவின் அதிகபட்சமாகவும் இது பதிவானது. இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
அடுத்து 233 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. குயின்டான் டி காக் (0), கேப்டன் ரோகித் சர்மா (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினார். அவர் 17 பந்துகளில் 7 சிக்சருடன் அரைசதத்தை கடந்து மிரள வைத்தார். இந்த சீசனில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான்.
ஹர்திக் பாண்ட்யா மிரட்டினாலும் ரன்தேவை அதிகமாக இருந்ததால் கொல்கத்தா அணியின் கையே ஓங்கி இருந்தது. பாண்ட்யா 91 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.
தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்று இருந்த கொல்கத்தா அணி ஒரு வழியாக தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. மேலும் கொல்கத்தா அணி 4 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது தொடர்ந்து 8 தோல்விக்கு பிறகு) மும்பையை சாய்த்து இருக்கிறது.
கொல்கத்தா தரப்பில் ரஸ்செல், நரின், குர்னே தலா 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லாவுக்கு ஐ.பி.எல்.-ல் இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 3-வது பவுலர் ஆவார். #IPL2019 #KKRvsMI
ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
102 பந்தில் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள். தவான் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோகித் சர்மா சற்று தடுமாறினார்.
5-வது ஓவரை பெரென்டோர்ப் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 13 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னில் அடுத்தடுத்து ஆடம் ஜம்பா சுழற்பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
மறுமுனையில் தவான் 28 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 32 பந்தில் 69 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.
கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அண்ட்ரிவ் டை 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை தினேஷ் கார்த்திக் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3-வது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.
ரிஷப் பந்த் ஆட்டமிழ்ந்ததும் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. இருந்தாலும் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் அபாரமான வகையில் பவுண்டரிக்கு விரட்டினார்.
இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். குருணால் பாண்டியா எதிர்கொண்டார். முதல் பந்தில் குருணால் பாண்டியா இரண்டு ரன்கள் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் கடைசி மூன்று பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் தினேஷ் கார்த்திக் 13 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடிக்க இந்தியா 17 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
இதனால் ஆஸ்திரேலியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மெல்போர்னில் 23-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 25-ந்தேதி சிட்னியிலும் நடக்கிறது. ஆடம் ஜம்பா, ஸ்டாய்னிஸ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
மேக்ஸ்வெல் 24 பந்தில் 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் விவரம்:-
இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், டி'ஆர்கி ஷார்ட், அலெக்ஸ் கேரி, பென்மெக்டர்மட், ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரிவ் டை, ஆடம் ஜம்பா, பெரென்டோர்ப், ஸ்டேன்லேக்.
டி ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆர்கி ஷார்ட் 7 ரன் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆரோன் பிஞ்ச் உடன் கிறிஸ் லின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆரோன் பிஞ்ச் 24 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். கிறிஸ் லின் 20 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 37 ரன்கள் விளாசினார். இரண்டு பேரையும் குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.
4-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தார். குறிப்பாக குருணால் பாண்டியா பந்தில் சிக்சராக விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
10 ஓவரில் 75 ரன்கள் சேர்த்திருந்த ஆஸ்திரேலியா 15 ஓவரில் 135 ரன்கள் சேர்த்தது. 16-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் குவித்தது. குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #AUSvIND #ViratKohli
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்